Kummiyattam

கும்மியாட்டம்

வட்டமாகச் சுற்றி வந்து கைகளைக் கொட்டி அடித்து ஆடப்படும் ஆட்டம் கும்மியாட்டம் எனப்படும். இந்திய நாட்டில் பரவலாக ஆடப்படும் கலை வடிவம் கும்மியாட்டம் ஆகும். பழைய தமிழ் இலக்கியங்களில் கும்மி பற்றிய குறிப்புகள் உள்ளன. கொம்மை என்ற சொல் அகநானூற்றிலும் புறநானூற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கைகளைக் குவித்துக் கொட்டுதல் என்று பழமொழி நானூறு இதனைக் குறிப்பிடுகிறது. சமயச் சடங்கு சார்ந்த கலைகளுள் ஒன்றான இந்தக் கலைவடிவம் நாட்டார் தெய்வக் கோயில்கள், பொங்கல் நிகழ்வுகள், முளைப்பாரிச் சடங்குகள் ஆகிய நிகழ்வுகளில் இடம் பெறுகிறது. கும்மியாட்டத்தை ஆண்களும் பெண்களும் ஆடுகின்றனர்.

பயிற்சி விவரம் :

  • 15 கும்மியாட்ட அடவுகள் அடவுகள்.
  • ஒவ்வொரு அடவிற்கும் பெயர் உண்டு.
  • கால் அசைவிற்கான விளக்கக் குறிப்பும் கற்றுத் தரப்படும்.
  • பயிற்சியின் இறுதியில் கும்மியாட்டத்தை மையப்படுத்திய பாடலுக்கு கும்மியாட்டம் வடிவமைக்கப்பட்டு அரங்கேற்றம் செய்யப்படும்.
  • முடித்ததற்கான கலை ஆளுமைகள் கையெழுத்துடன் வலைத்தமிழ் சான்றிதழ் வழங்கப்படும்.